திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி தொகுதி மேற்கு ஆரணி ஒன்றியம் குன்னத்தூர் ஊராட்சி காமராஜர் நகரில் அருந்ததியர் குடியிருப்பு பகுதி மக்கள் சுமார் 450 குடும்பங்கள் வசிக்கின்றனர்.
அவர்களுக்கு மயான பாதை இல்லை. அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். உடனடியாக ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் தரணிவேந்தன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.பொதுப்பணி அமைச்சரிடம் தகவல் சொல்லி அதற்கான ஏற்பாடுகளை உடனடியாக செய்வதாக கூறினார்.
உடன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எதிரொலி மணியன், மாவட்ட பொருளாளர் DA. தக்ஷிணாமூர்த்தி, மாவட்ட துணை செயலாளர் ஜெயராணி ரவி, ஒன்றிய செயலாளர் SS. அன்பழகன், நகர செயலாளர் AC.
மணி, ஒன்றிய செயலாளர்கள் M. சுந்தர், துரைமாமது, S. மோகன், கண்ணமங்கலம், பேரூர் செயலாளர் K. கோவர்த்தனன் மற்றும் அணிகளின் அமைப்பாளர்கள், ஒன்றிய நகர கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.