ஃபெஞ்சால் புயல் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த புதுச்சேரி, விழுப்புரம், கடலூர் மக்கள்: அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைப்பதை உறுதிப்படுத்துவதோடு, மீட்புப்பணிகளை தமிழ்நாடு அரசு விரைவுப்படுத்த வேண்டும்.
புயல் மற்றும் கனமழையால், கடலூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அப்பகுதி மக்களுக்கு போதிய உதவிகளை அளித்திட, தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகளும், தோழர்களும் உடனடியாக செயலாற்றிட வேண்டுமென தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் அறிவுறுத்துகிறேன் என பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ அறிக்கை வெளியிட்டுள்ளார்.