கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியில் ஃபெங்கல் புயல் காரணமாக பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் பாதிப்புகள் ஏற்பட்டது.
இந்த நிலையில் மழைநீர் வடிகால் பணிகளை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மற்றும் திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் கணேசன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
உடன் அதிகாரிகள் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.