கடலூர் அடுத்த அழகப்பா நகர் பகுதியில் மழை நீர் அதிகரித்து ஓடுவதால் பல்வேறு இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனை அடுத்து கார் ஒன்றில் பாம்பு ஒன்று இருந்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த காரின் உரிமையாளர் உடனடியாக கடலூர் பாம்பு பிடி வீரர் செல்லாவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலின் பேரில் அங்கு விரைந்து சென்ற பாம்பு பிடி வீரர் செல்லா சுமார் நான்கு அடி நீளமுள்ள நல்ல பாம்பினை லாவகமாக பிடித்து காப்பு காட்டில் விட எடுத்து சென்றார். இதனை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.