கடலூர் மாநகராட்சி மஞ்சக்குப்பம் அருகே உள்ள விக்னேஷ் திருமண மண்டபத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு மருத்துவ முகாம் மற்றும் அப்பகுதி மக்களுக்கு உணவு தயார் செய்வதை நேற்று (02.12.2024) வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் மற்றும் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
உடன் ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன் தீப் சிங் பேடி, தமிழ்நாடு சாலைகள் மேம்பாட்டுத் திட்ட இயக்குனர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ராமன், மாவட்ட ஆட்சியர் சி.பி. ஆதித்யா செந்தில்குமார், மாநகராட்சி மேயர் சுந்தரிராஜா உட்பட பலர் உள்ளனர்.