கடலூர் தென்பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கரைகளில் உடைப்பு ஏற்பட்டு குடியிருப்புகளுக் குள் தண்ணீர் புகுந்தது.
இது மட்டுமின்றி கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு செல்லும் பிரதான சாலையான சின்ன கங்கணாங்குப்பம், பெரிய கங்கணாங்குப்பம் ஆகிய பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் வாகனங்கள் ஊர்ந்து சென்று வந்தன. ஆனால் நேரம் செல்ல செல்ல சாலைகளில் தண்ணீர் அதிகஅளவு சென்றதால் வாகனங்கள் செல்ல காவல் துறையினர் தடை விதித்தனர்.
இதையடுத்து இரும்பு தடுப்புகள்வைத்து போக்குவரத்துக்கு தடை விதித்துள்ளனர். இதனால் கடலூரில் இருந்து ஆல்பேட்டை சோதனைச்சாவடி, தென்பெண்ணையாறு பாலம் வழியாக புதுச்சேரிக்கு செல்ல போக்குவரத்துக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் வாகனங்கள் செம்மண்டலம், உண்ணாமலை செட்டிச்சாவடி வழியாகவும், சில வாகனங்கள் கோண்டூர் சென்று, அங்கிருந்து புறவழிச்சாலை வழியாகவும் புதுச்சேரிக்கு சென்று வருகிறது.