திருவண்ணாமலையில் மலையின் அடிவாரத்தில் மண் சரிவு ஏற்பட்ட இடத்தினை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி நிவாரண பொருட்களை வழங்கினார்.
உடன் தமிழ்நாடு பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ. வ. வேலு, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி, திருவண்ணாமலை நகராட்சி மேயர் நிர்மலா வேல்மாறன், நகர செயலாளர் கார்த்திக் பெருமாள், கழக மருத்துவரணி துணைத் தலைவர் மாவட்ட டாக்டர் எ வ. வே. கம்பன், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் திமுக கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.