திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த பையூர் ஏரிக்கரையை சிலர் ஆக்கிரமித்து வீடுகளை கட்டியுள்ளனர். இந்த நிலையில், புயல் காரணமாக பலத்த மழை பெய்தது. இதில், ஏரியில் தண்ணீர் நிரம்பியதால் ஆக்கிரமிப்பாளர்கள் ஏரிக்கரையை உடைத்தனர். இதனால் கே. கே. நகர் குடியிருப்புப் பகுதியில் தண்ணீர் புகுந்தது.
பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் பொதுப்பணித் துறையினர் நேற்று காலை உடைக்கப்பட்ட ஏரிக்கரையில் மணல் மூட்டைகள் வைத்து அடுக்கி, பொக்லைன் இயந்திரம் மூலம் கரையை பலப்படுத்தினர். இதனால் தண்ணீர் வெளியேறாமல் தடுக்கப்பட்டது.