ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த 3 நாள்களாக கடும் மழையை கண்டுள்ளது. குறிப்பாக, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர் ஆகிய மாவட்டங்கள் இதுவரை கண்டிராத மழையை சந்தித்தன.
குறிப்பாக, திருவண்ணாமலை மாவட்டத்தின் பல பகுதிகள் கடும் வெள்ளச் சேதப் பாதிப்பை கண்டுள்ளது. திருவண்ணாமலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் 5 குழந்தைகள் உட்பட 7 பேர் சிக்கிய நிலையில், 3 பேரின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளன.
ஆங்காங்கே தொடர்ந்து சில நிலச்சரிவுகள் ஏற்பட்டு வருகின்றன. பல பகுதிகளில் இன்னும் வெள்ளம் வடியாத நிலையில், இன்றைய தினமும் (செவ்வாய்கிழமை) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், வெள்ளம் வடியாததால் திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்றும் விடுமுறை என அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.