திருவண்ணாமலையில் மண் சரிவில்ஒரே குடும்பத்தை சேர்ந்த, குழந்தைகள் உள்ளிட்டோர் 7 பேர் மண்ணில் புதைந்து உயிரிழந்த சம்பவம், பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டு மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
இதனைத் தொடர்ந்து திருவண்ணாமலைக்கு விரைந்த அவர் மண்சரிவு நடைபெற்ற இடத்தில் ஆய்வுமேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு பேட்டியளித்த அவர் மண்சரிவில் உயிரிழந்த ஏழு பேரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாகவும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருககு தலா ரூ. 5 லட்சம் தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
மீட்கப்பட்ட உடல்கள் கொண்டுசெல்லப்பட்ட நிலையில் அங்கு சென்ற துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் அமைச்சர் எ.வ. வேலு மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.