சங்கராபுரம் சிவன் கோவில் அருகே மரம் விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சங்கராபுரம் சிவன் கோவில் அருகில் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் பலத்த காற்றில் தேக்கு மரம் வேறுடன் சாய்ந்து மின்சார கம்பிகள் மீது விழுந்தது.
இதனால் மின்சார கம்பிகள் அறுந்து கீழே விழுந்து சுற்று வட்டார பகுதியில் மின்சாரம் தடைப்பட்டது.இது குறித்து தகவலறிந்த மின்வாரிய ஊழியர்கள் அறுந்து விழுந்த மின்சார கம்பிகளை சரிசெய்து தடையான மின்சாரத்தை மீண்டும் வழங்கினர்.