கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும்பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறையின்மூலம் மழைக்கால நோய்களுக்கான சிறப்புமருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
காய்ச்சல், சளிபரிசோதனை, ரத்தக் கொதிப்பு, நீரிழிவு நோய்களுக்கானபரிசோதனைகள் எடுக்கப்படுகிறது. மருந்துகள், உப்பு சர்க்கரைகரைசல், நிலவேம்பு குடிநீர், சேற்றுப்புண் மருந்து போன்றஅத்தியாவசிய மருந்துகள் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது.
இதன் மூலம் பொதுமக்களுக்கு தொற்றுநோய் ஏற்படுவதுமுன்கூட்டியே தடுக்கப்படும்.மாவட்டம் முழுவதும் கள்ளக்குறிச்சி, சின்னசேலம், சங்கராபுரம், கரியாலுார், திருக்கோவிலுார், தியாகதுருகம், திருநாவலுார், உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம் ஆகிய 9வட்டாரங்களில் மொத்தம் 54 இடங்களில் சிறப்பு மருத்துவமுகாம்கள் நடத்தப்பட்டது.
முதல்நாள் முகாமில் 1,209 நபர்கள்சிகிச்சை பெற்று பயனடைந்தனர்.இதேபோன்று இரண்டாம் நாளான நேற்று, 54 இடங்களில் தொடர்ந்து சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. எனவே, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மழைக்கால நோய்களிலிருந்துபொதுமக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் எனகலெக்டர் பிரசாந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.