திருவண்ணாமலை மாவட்ட சாதாரண ஊராட்சி குழு கூட்டம் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட ஊராட்சி குழு கட்டிடத்தில் இன்று(டிச.3) நடைபெற்றது.
இந்த நிகழ்வில், திருவண்ணாமலை மாவட்டத்தில் ஃபென்சல் புயல் காரணமாக இடைவிடாத பெய்த மழையின் காரணமாக தீபமலையின் எதிர்பாராத நிலசரிவில் வீடுகளின் மீது பாறை வீழ்ந்த விபத்தில் சிக்கி 5 குழந்தைகள் உட்பட உயிரிழந்த 7 நபர்களின் குடும்பத்தினர்களுக்கும் மற்ற மாவட்டங்களில் ஃபென்சல் புயலால் இறந்த அனைவருக்கும் இம்மன்றத்தின் சார்பாக ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் பிறக கும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடுகளைப் போக்கும் பொருட்டு ஊட்டச்சத்தை உறுதி செய்யும் திட்டத்தினை இரண்டாவது கட்டமாக துவக்கி வைத்ததற்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், துணை முதலமைச்சர் அவர்களுக்கும், பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்து மாவட்ட ஊராட்சி குழு தலைவர் (ம) திட்ட குழு தலைவர் S. பார்வதி சீனிவாசன் சிறப்புரை ஆற்றினார். உடன் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சி குழு செயலாளர், வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.