திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், தெள்ளார் ஊராட்சியில் ஃபென்சல் புயலால் ஏற்பட்ட கனமழையில் 4 வீடுகள் சுவர் இடிந்து பாதிக்கப்பட்டவர்களை, ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் தரணிவேந்தன், வந்தவாசி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அம்பேத்குமார் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரணம் மற்றும் நிதியுதவி வழங்கினார்கள்.
உடன் ஒன்றிய கழக செயலாளர்கள் T. D. ராதா, A. சுந்தரேசன், ஒன்றிய கவுன்சிலர் சுகந்தினி கோபிநாதன், ஊராட்சி மன்ற தலைவர் T. G. ஆனந்தன், சுற்றுச்சூழல் அணி மாவட்ட துணைத்தலைவர் M. விநாயகமூர்த்தி, ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் G. சிவராமகிருஷ்ணன், தொழிலாளர் அணி அமைப்பாளர் T. G. மோகன், கிளைக் கழக செயலாளர் செந்தில், TNSTC. ஆறுமுகம், கீழ்நமிண்டி சேகர் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.