திருவண்ணாமலை மத்திய மாவட்டம், போளூர் தெற்கு ஒன்றியம் திரிசூர் ஊராட்சியில் கனமழை காரணமாக இடிந்த வீட்டினை, போளூர் சட்டமன்ற உறுப்பினர் அக்ரி SS. கிருஷ்ணமூர்த்தி மற்றும் திருவண்ணாமலை மத்திய மாவட்ட அதிமுக செயலாளர், L. ஜெயசுதா லட்சுமிகாந்தன் நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கினார்கள்.
உடன், கழக விவசாய பிரிவு துணை செயலாளர் செல்வம், பொதுக்குழு உறுப்பினர் ராஜன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் குருவிமலை கார்த்திகேயன், ஒன்றிய கழக செயலாளர் விமல் ராஜ், ஸ்ரீதர், மாவட்ட இளைஞர் இளம்பெண் பாசறை செயலாளர் செந்தில்குமார், பேரூராட்சி உறுப்பினர் அம்பிகா முருகன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.