திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த சந்தவாசல், படவேடு, கல்பட்டு, காளசமுத்திரம், அனந்தபுரம், குப்பம், கேளூர் என பல்வேறு ஊராட்சிகளில் விவசாயிகள் கற்பூர வாழை, மொந்தை வாழை, ரஸ்தாலி, பூவான், ஏலக்கி என பல்வேறு வகையான வாழைகளை சாகுபடி செய்துள்ளனர்.
இந்த நிலையில், ஃபென்ஜால் புயலால் வீசிய சூறைக்காற்றில் சுமார் 100 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழைகள் சாய்ந்து சேதமடைந்தன. எனவே, மாவட்ட நிர்வாகம் தோட்டக்கலைத் துறை மூலம் கணக்கீடு செய்து நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து தோட்டக்கலைத் துறை அலுவலர்கள் கூறுகையில், சேதமடைந்த வாழைகளை பார்வையிட்டு வருகிறோம் என்றனர்.