ஃபெஞ்சல் புயல் காரணமாக கடலூரில் பெய்த கனமழை காரணமாக தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு, கரையோரம் உள்ள பகுதிகளில் தண்ணீர் புகுந்துள்ளது.
இந்த சூழலில், கடலூர் – புதுச்சேரி எல்லையில் உள்ள சின்னகங்கனாங்குப்பத்தில் தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதையும், அங்கே கரையோரத்தில் தண்ணீர் புகுந்துள்ளதையும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (டிசம்பர் 3) நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்து, வெள்ள நீரை விரைந்து வெளியேற்றிட அதிகாரிகள அறிவுறுத்தினார்.
மேலும், அங்கு வசிக்கும் பொதுமக்களை தற்காலிக நிவாரண முகாம்களில் பாதுகாப்பான முறையில் தங்க வைக்கப்பட்டுள்ள விவரத்தை கேட்டறிந்து, அவர்களுக்கு உரிய முறையில் உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்க ஆலோசனைகளை வழங்கினார்.
உடன் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன், கடலூர் மாவட்ட ஆட்சியர் சி.பி. ஆதித்யா செந்தில்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.