தமிழக விவசாயிகள் மக்கள் கட்சி மற்றும் வெலிங்டன் நீர்த்தேக்க பாசன சிறு குறு விவசாயிகள் சங்கத்தின் சார்பாக தமிழக விவசாயிகள் மக்கள் கட்சியின் தலைவர் தயா. பேரின்பம் தலைமையில் ஃபெஞ்சல் புயல் தொடர்மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டத்தில் தொடர் மழை மற்றும் ஃபெஞ்சல் புயல் காரணமாக பெருமுளை, சிறுமுளை, மேலூர், நாவலூர், போத்திரமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சோளம்/ பருத்தி ஏனைய பயிர்கள் சேதாரம் ஆகி உள்ளது. தன் குடும்பத்திற்காகவும், தன் குழந்தைகளின் கல்விக்காகவும் விவசாயிகள் கடன் வாங்கி சாகுபடி செய்து வந்தனர்.
இன்று விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் நாசமாகி உள்ளது, எனவே பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கும், விவசாய பயிர்களுக்கும் இழப்பீடு (நிவாரணம்) வழங்க வேண்டி இன்று 03-12-2022 திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.