கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த கழுதூர் ஊராட்சியில் பாரத ஸ்டேட் வங்கி சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. இந்த வங்கியில் 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பொதுமக்கள் வரவு செலவு வைத்து வருகிறார்கள்.
முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் என அனைவரும் இந்த வங்கியில் பணம் எடுத்தல், பணம் போடுதல் என பயன்படுத்தி வருகிறார்கள்.இந்த வங்கியில் ஏடிஎம் மெஷின் வைக்கப்பட்டு இயங்கி வந்தது. பத்துக்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அனைவரும் ஏடிஎம் மெஷின் பயன்படுத்தி பணம் எடுத்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த 1 ஆண்டுகளுக்கு மேலாக ஏடிஎம் மெஷின் இயங்காமல் பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பணம் எடுப்பதற்கு சிரமமாக உள்ளது என புலம்பி வருகிறார்கள்.இது பற்றி வங்கியில் உள்ள அதிகாரியிடம் பொதுமக்கள் முறையிட்டும் ஏடிஎம் மெஷின் சரி செய்யப்படாத நிலையில் உள்ளது.
அருகிலுள்ள ஏடிஎம் மெஷினில் பொதுமக்கள் மூன்று முறைக்கு மேல் பணம் எடுத்தால் அதிகப்படியாக பணம் எடுப்பதாக கூறி புலம்பி வருகிறார்கள். நவீன காலம் வந்த பிறகும் இதுபோன்று ஏடிஎம் மெஷின் செயல்படாமல் இருப்பது வெட்கக்கேடாக உள்ளது என பொதுமக்கள் புலம்பி தள்ளுகிறார்கள்.
மேலும் ஒரு வருட காலத்திற்கும் மேலாக இயங்காமல் உள்ள ஏடிஎம் மெஷினை சரி செய்து பொதுமக்கள் வாடிக்கையாளர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.