கடலூர் மாவட்டம் வேப்பூர் லெமன் ஹோட்டலில் பாட்டாளி மக்கள் கட்சியின் நல்லூர் மேற்கு ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஒன்றிய செயலாளர் கமலி வேல்முருகன் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக கட்சியின் மேலிட பொறுப்பாளர்கள் மாநில அமைப்பு செயலாளர் சண்முகம், மாநில இளைஞர் சங்க செயலாளர் ராஜசேகர், தென்காசி மாவட்ட செயலாளர் இசக்கிமுத்து ஆகியோர் கலந்து கொண்டு கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினர்.
இதில் கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் உட்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.