திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே உள்ள சாத்தனூர் அணைக்கு, தென்பெண்ணை ஆற்றில் இருந்து நீர்வரத்து அதிகரித்ததால் நேற்று 1 லட்சத்து 68 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
இதனால் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் வெள்ளச் சேதம் ஏற்பட்டது. இன்று காலை சாத்தனூர் அணைக்கு 36 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் வந்தது. இதனால் அணையில் இருந்து நீர் திறப்பு 36 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது.