கோக்கு மாக்கு
Trending

கொடைக்கானல் கூட்டுறவு வங்கியில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விடிய, விடிய நடத்திய சோதனையில் கணக்கில் வராத 2 லட்சத்து 4 ஆயிரத்து 10 ரூபாய் பறிமுதல்

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலை பகுதியான போளூர், மன்னவனுார் கூட்டுறவு வங்கியில் வாடிக்கையாளர்கள் பெயரில் பல லட்சம் ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்த வரும் கூட்டுறவு வங்கி உயர் அதிகாரிகளை சரி கட்ட போளூர், மன்னவனுார் கூட்டுறவு வங்கி பணியாளர்கள் லஞ்சம் கொடுக்க தயாராக உள்ளதாக திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்படி டி.எஸ்.பி., நாகராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி உள்ளிட்டோர் மாலை 6:00 மணி முதல் காலை வரை சோதனை நடத்தினர். வங்கியில் பணியாற்றும் கோபாலகிருஷ்ணன், ராமசாமி, பிச்சைமணி, கருணாநிதி உள்ளிட்டோரிடம் இருந்த கணக்கில் வராத 2 லட்சத்து 4 ஆயிரத்து 10 ரூபாயை பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக கூட்டுறவு வங்கி உயரதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button