ஆரணியை அடுத்த ஆகாரம், மேல்சீசமங்கலம், அரையாளம், வடுகசாத்து, ஆதனூர் ஆகிய இடங்களில் சுமார் 500 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல் பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்தன. இது விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்திருந்த நிலையில், ஆகாரம், மேல்சீசமங்கலம், வடுகசாத்து கிராமங்களில் சேதமடைந்த நெல் பயிர்களை சேவூர் எஸ். ராமச்சந்திரன் எம்எல்ஏ நேரில் சென்று பார்வையிட்டார்.
மேற்கு ஆரணி வேளாண் உதவி இயக்குநர் செல்லத்துரை, அதிமுக மத்திய மாவட்டச் செயலர் எல. ஜெயசுதா, ஒன்றியச் செயலர்கள் க. சங்கர், விமல், ஆரணி நகரச் செயலர் அசோக்குமார், அம்மா பேரவை மாவட்டச் செயலர் பாரி பி. பாபு உள்ளிட்டோர் உடனிருந்தனர்