அரசூர் பகுதியில் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசலால், கனரக வாகனங்கள் மாற்று வழியில் இயக்கப்படுகிறது.
சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அரசூர் கூட்டரோடு பகுதியில் நேற்று முன்தினம் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தொடர்ந்து படிப்படியாக தண்ணீர் குறைந்ததையடுத்து, நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் அரசூர் பகுதியில் மட்டும் ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டு வாகன போக்குவரத்து நடக்கிறது. இச்சாலை வழியாக பஸ் போக்குவரத்துடன், ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் செல்லும் நிலையில், ஒரு வழிப்பாதையாக உள்ள அரசூர் பகுதியில் அவ்வப்போது தொடர்ந்து கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதனையொட்டி சேலம் மார்க்கத்திலிருந்து வரும் கனரக வாகனங்கள் தியாகதுருகம், எலவனாசூர்கோட்டை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பைபாஸ் சாலை சந்திப்புகளில் போலீசார் வாகனங்களை தடுத்து நிறுத்தி திருவண்ணாமலை, செஞ்சி வழியாக மாற்று வழியில் செல்லுமாறு வாகன ஓட்டிகளிடம் போலீசார் அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.