ஃபெஞ்சல் புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக நடைபெற்று வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
இதையடுத்து, புயல் – மழை வெள்ளம் தொடர்பாக கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற உயர் நிலை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தின் போது, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விளைநிலங்கள்-
துண்டிக்கப்பட்ட சாலைகள் – பழுதடைந்த மின்கம்பங்கள் உயிரிழந்த கால்நடைகள்- இடிந்த வீடுகள் உள்ளிட்ட பாதிப்புகளின் நிலவரங்களையும், அதிலிருந்து மக்களை மீட்டெடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளையும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.கடலூர் மாவட்டத்தில் இயல்புநிலை திரும்பிடத் தேவையான அனைத்துப் பணிகளும் தொய்வின்றி நடைபெறுவதை உறுதி செய்ய அறிவுறுத்தினார்.
குறிப்பாக, மழைநீர் தேங்குவதால் பரவுகிற தொற்றுநோய்களிலிருந்து மக்களை காக்கும் வண்ணம், தொடர் மருத்துவ முகாம்கள் நடத்த ஆலோசனைகளை வழங்கினார். உடன் கடலூர் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் கலந்து கொண்டனர்.