திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி பாப்பாத்தி அம்மன் கோவில் தெருவில் உள்ள ஜெ. டி. ஆர். வித்யாலயா நர்சரி பள்ளியில் உணவுக் கண்காட்சி நடைபெற்றது. இதில், பள்ளித் தலைமை ஆசிரியர் எம். டில்லிபாபு தலைமை வகித்தார். மாணவ, மாணவிகள் வீட்டில் தயாரித்து எடுத்து வந்த உணவுப் பொருள்களான இனிப்பு வகைகள், கார வகைகள் மற்றும் சைவ, அசைவ உணவுகளை விற்பனைக்கு வைத்திருந்தனர்.
மாணவ, மாணவிகளின் பெற்றோர் உணவுப் பொருள்களை வாங்கிச் சென்றனர். இதன் மூலம் கிடைத்த வருவாயை பத்தியாவரம் பார்வையற்றோர் பள்ளி மாணவர்களின் உணவுச் செலவுக்காக வழங்கப்படும் என்று பள்ளித் தலைமை ஆசிரியை ராஜேஸ்வரி தெரிவித்தார். பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் உணவுக் கண்காட்சியினை பார்வையிட்டனர்.