திருவண்ணாமலை மாவட்டம் போளூர், சட்டமன்றத் தொகுதி, சேத்துப்பட்டு ஓதலவாடி பகுதியில் மழை வெள்ளத்தால் சேதம் அடைந்த தரைப்பாளம் உள்ளிட்ட போளூர் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் மழை வெள்ள பாதிப்புகள் குறித்து திமுக மாநில மருத்துவரணி துணைத்தலைவர் எ. வ. வே. கம்பன் அதிரடி ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது புளிவானந்தல் பகுதியில் பாலம் வேண்டி பொதுமக்கள் மனு கொடுத்தனர். அதேபோல் போளூர் அருகே பெரியகரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளும் போது பொதுமக்கள் பல குறைகளை சொல்லி உடனடி நடவடிக்கை எடுக்கவும் மனு அளித்தனர்.
மனுக்களைப் பெற்ற மருத்துவர் எ. வ. வே. கம்பன் உரிய அலுவலர்களிடம் கொடுத்து உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அலுவலர்களை கேட்டுக்கொண்டார்.இந்த ஆய்வின்போது மாவட்ட அவைத் தலைவர் ராஜசேகரன், தலைமை செயற்குழு உறுப்பினர் கே. வி. ராஜ்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே. வி. சேகரன், இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் நரேஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.