
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த நெடுங்குணம் கிராமத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நெடுங்குணம் பூமால் செட்டி குளத்திற்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ள காரணத்தால் குளத்திற்கு உள்ளே வளர்ந்திருந்த செடி கொடிகளை அகற்றும் பணியில் தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.