பாலம் உள்வாங்கியதால் கடலூர் – புதுச்சேரி சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் இருந்து கடலூர் செல்லும் சாலையில் இடையார்பாளைய மேம்பாலம் வெள்ளத்தால் சேதமடைந்து உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மலட்டாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் மேம்பாலம் சேதமடைந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் மாற்றுப் பாதையில் கொம்பாக்கம், திருக்காஞ்சி, தவளக்குப்பம் வழியாக கடலூருக்கு திருப்பி விடப்பட்டன.