
ஃபெஞ்சல் புயல் காரணமாக கடலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வில்வராயநத்தம் பகுதியில் மழைநீர் பாதிப்பினால் கொசுப்புழு உற்பத்தியை தடுக்கும் பொருட்டு ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கும் பணிகளை நேற்று 04.12.2024) வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் மற்றும் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார். உடன் மாநகராட்சி மேயர் சுந்தரிராஜா, மாநகராட்சி ஆணையாளர் திரு. எஸ். அனு, சிதம்பரம் துணை ஆட்சியர் செல்வி ரஷ்மி ராணி, மாமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் உள்ளனர்.