கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள செவ்வேரி கிராமத்தை சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி. கடந்த 30 ஆம் தேதி தேர்வு எழுத கல்லூரிக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றார். ஆனால் மீண்டும் வீடு திரும்பவில்லை.
அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்த புகாரின்பேரில் திட்டக்குடி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.