வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீது நடத்தப்படும் வன்முறையை கண்டித்து கள்ளக்குறிச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்திய ஹிந்து அமைப்பினரை போலீசார் கைது செய்தனர். வங்கதேசத்தில் ஹிந்து மக்கள் மீது நடத்தப்படும் வன்முறையை கண்டித்து, வங்கதேச ஹிந்து உரிமை மீட்புக்குழுவினர் நேற்று கள்ளக்குறிச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கச்சேரி சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆர்.எஸ்.எஸ். கோட்ட தலைவர் மணிவண்ணன் தலைமை தாங்கினார்.
மாவட்ட தலைவர் மகாதேவன், பா.ஜ. மாவட்ட தலைவர் அருள், விஷ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட பொதுச் செயலாளர் மீனாட்சிசுந்தரம் முன்னிலை வகித்தனர். ஆர்.எஸ்.எஸ்.மாநில செயலாளர் பாலாஜி, பா.ஜ. மாநில பொதுச் செயலாளர் கார்த்தியாயினி கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில், வங்கதேசத்தில் யூனுஸ் தலைமையிலான அரசு ஹிந்துக்களுக்கு எதிராக நடத்தி வரும் மனித நேயமற்ற வன்முறையை கண்டித்தும், இந்திய அரசு உடனடியாக தலையிட்டு உலக அரங்கில் வங்கதேசத்தை தனிமைப்படுத்த வேண்டும், வங்கதேசத்துக்கு ஐ.நா. படையை அனுப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.