உளுந்தூர்பேட்டை ராமகிருஷ்ணா வித்யாலயா குருகுலத்தில் மாணவர் திறன் விழிப்புணர்வு மற்றும் ஆளுமை பயிற்சி நிகழ்ச்சி நடந்தது.
இந்தப் பயிற்சிக்கு குருகுல தாளாளர் யத்தீஸ்வரி அனந்த பிரேம ப்ரியா அம்பா தலைமை தாங்கி ஆசிரியுரை வழங்கினார்.சிறப்பு விருந்தினராக சென்னை ராமகிருஷ்ணா மடத்தின் சுவாமிஜியும், ராமகிருஷ்ண விஜயம் ஆன்மீக மாத இதழின் பதிப்பாசிரியருமான சுவாமி அபயானந்த மகாராஜ் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.
சீனியர் முதல்வர் நிஷ்காம்ய ப்ராணா மாஜி, அறிமுகவுரையாற்றினார். குருகுலத்தின் முதல்வர் சசிகலா, ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.