கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூர் சரவணா நகரில் உள்ள ராஜசேகர் வீட்டில் பால் சொம்பில் பூனை ஒன்று மாட்டிக்கொண்டது. இது குறித்து வீட்டின் உரிமையாளர் பாம்பு பிடி வீரர் செல்லாவிற்கு தகவல் தெரிவித்தார்.
பின்னர் பாம்பு பிடி வீரர் செல்லா வந்து பூனையை எடுக்க முயன்றார். ஆனால் முடியவில்லை.பின்னர் கால்நடை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று பூனைக்கு மயக்க ஊசி செலுத்திய பின்னர் நீண்ட நேரம் போராட்டத்திற்குப் பிறகு பூனை சொம்புக்குள் இருந்து வெளியே எடுக்கப்பட்டது.
இதனை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பாம்பு பிடி வீரர் செல்லாவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.