திருவண்ணாமலை மாவட்டத்தில் ஃபென்சல் புயலால் மண் சரிவு ஏற்பட்டு உயிர் இழந்தவர்களின் குடும்ப நபர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களால் அறிவிக்கப்பட்ட ரூபாய் 5 லட்சத்திற்கான தொகை பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஈ.வ. வேலு தலைமையில் வழங்கப்பட்டது.
உடன் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர் பாண்டியன், கழக மாநில மருத்துவரணி துணைத் தலைவர் மருத்துவர் இ.வ.வே. கம்பன், தமிழ்நாடு சட்டப்பேரவை துணைச் சபாநாயகர் பிச்சாண்டி, திருவண்ணாமலை நகராட்சி மேயர் நிர்மலாவேல்மாறன், நகர செயலாளர் கார்த்திக் வேல்மாறன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.