திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டை அடுத்த ஆத்துரை கிராமத்தில் ஐயப்ப பக்தர்கள் திருவிளக்கு பூஜை நடத்தினர். இந்தக் கிராமத்தில் ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை முதல் தேதி மாலை அணிந்து கோயிலில் பூஜை செய்து தினமும் வழிபாடு நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து, 25-ஆவது ஆண்டாக நடைபெற்ற இந்தப் பூஜையில் பக்தர்கள் ஐயப்பன், விநாயகர், முருகன் ஆகியோரது உருவப்படங்களை மலர்களால் அலங்கரித்து வழிபட்டனர். இதில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டனர். மரேலும், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.