திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி சன்னதி தெருவில் அமைந்துள்ள காமாட்சி அம்மன் மற்றும் மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக கோவில் வளாகத்தில் யாக சாலை அமைத்து கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி ஹோமம், மகாலட்சுமி ஹோமம் உள்ளிட்ட ஹோமங்கள் செய்யப்பட்ட பின்பு பூர்ணாஹுதி நிறைவேற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க வேத விற்பன்னர்கள் கலசத்தை கோவிலை சுற்றி வந்து கோவில் மேலுள்ள கோபுரத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். பின்னர் மூலவரக்கு கலச நீரை ஊற்றி தீபாராதனை காண்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நிறைவேற்றப்பட்டது.
இதில் வந்தவாசி சுற்றியுள்ள கீழ்கொடுங்காலூர், மருதாடு உள்ளிட்ட கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்