
கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு ஏரிகள் அதன் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வருகின்றன. இந்நிலையில் போளூர் அடுத்த ஆத்துவம்பாடியில் அமைந்துள்ள ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது. அதனைக் கொண்டாடும் விதமாக கிராம பொது மக்கள் ஏரியில் மலர் தூவி தீபாரதனை செய்து இன்று வழிபட்டனர்.