திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தொகுதி, தண்டராம்பட்டு ஒன்றியத்திற்குட்பட்ட, தென்பெண்ணை ஆற்றங்கரையோரத்தில் அமைந்துள்ள தொண்டமானூர் கிராமத்தில் ஃபெஞ்சல் புயலினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு தேவையான அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு. பெ. கிரி வழங்கினார்.
இந்நிகழ்வில், ஒன்றிய செயலாளர்கள் இரமேஷ், செந்தில்குமார், மு. ஒன்றிய செயலாளர் ஜெயராமன், மாவட்ட கவுன்சிலர் சத்யா வெங்கடேசன், மாவட்ட கலைஇலக்கிய அணி துணை அமைப்பாளர் தண்டராம்பட்டு ரவி, ஒன்றிய கவுன்சிலர் கார்த்திக், கிளை செயலாளர்கள் புல்லார், வீரபத்திரன், சங்கர், BLA-2 மணி, இளைஞரணி அஜித் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனார்.