கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி பச்சையாங்குப்பம் ஊராட்சியில் ஃபெஞ்சல் புயலின் காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த கனமழையின் காரணமாக வீடுகளை சுற்றி மழை நீர் தேங்கியிருந்ததால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
இந்த நிலையில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் மற்றும் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் முயற்சியில் நெய்வேலி என்எல்சி மூலம் மழை நீரை உடனடியாக அகற்றும் பணி நடைபெற்றது.