கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள திருவள்ளுவர் நெசவாளர் குடியிருப்பு பகுதியில் உள்ள போர்வெல் மூலம் அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் போர்வெல் பழுதாகி தண்ணீர் சேறு போல் வருவதால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று (டிசம்பர் 5) குறிஞ்சிப்பாடி பேரூராட்சி அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிட்டு புதிய போர்வெல் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.