திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தொகுதி, தண்டராம்பட்டு ஊராட்சியில் உள்ள புரட்சியாளர் Dr. BR. அம்பேத்கர் அவர்களின் உருவச்சிலைக்கு இன்று அவரது நினைவு நாளை முன்னிட்டு, செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு. பெ. கிரி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில், ஒன்றிய கழக செயலாளர் இரமேஷ், மாவட்ட அணி அமைப்பாளர்கள் பொன் தனுசு, வேலு, மு. ஒன்றிய செயலாளர் ஜெயராமன், ஒன்றிய கழக நிர்வாகிகள் ஜோதி, கல்பனா ஜோதி, வெங்கடேசன் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, நகர, ஊராட்சி, கிளை கழக நிர்வாகிகள், அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், முன்னாள் இந்நாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.