திருவண்ணாமலையில் சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு அவரது உருவ சிலைக்கு தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ. வேலு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
உடன் தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி, செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி, தலைமை செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன், கழக மருத்துவரணி துணைத் தலைவர் எ. வ. வே. கம்பன், நகர செயலாளர் கார்த்திக் வேல்மாறன், பிரியா விஜயரங்கன் திமுக கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் உடன் இருந்தனர்