திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இன்று (டிச.6) காலை ஆற்றில் மழை பெய்ததால் வரும் வெள்ளத்தில் அடித்துச் சென்றார்.
உடனடியாக அருகில் இருந்தவர்கள் தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவித்தனர். உடனடியாக விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் அடித்துச் சென்ற முதியவரைத் தேடி வருகிறார்கள். இது குறித்து முதியவர் யார், அவருடைய பெயர் என்ன என்று கலசப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.