திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை மகா தீபத் திருவிழா, நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது..விழாவின் முதல் நாளான புதன்கிழமை காலை வெள்ளி விமான வாகனங்களிலும், இரவு 10 மணிக்கு வெள்ளி அதிகார நந்தி வாகனத்திலும் உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், ஹம்ச வாகனத்திலும் பராசக்தியம்மன் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடைபெற்றது.
தீபத் திருவிழாவின் 2-ஆவது நாளான நேற்று காலை 9 மணிக்கு மூஷிக வாகனத்தில் விநாயகர், தங்க சூரியபிரபை வாகனத்தில் சந்திரசேகரர் வீதியுலா நடைபெற்றது. இரவு 10 மணிக்கு வெள்ளி இந்திர விமானங்களில் பஞ்சமூர்த்திகள் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.காலை மற்றும் இரவு என இரு வேளைகளிலும் திருவண்ணாமலை தேரடி தெரு, திருவூடல் தெரு, பே கோபுரத் தெரு, பெரிய தெருக்களில் பஞ்சமூர்த்திகள் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். வீதியுலாவையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். விழா ஏற்பாடுகளை, அருணாசலேஸ்வரர் கோயில் நிர்வாகம், அறங்காவலர் குழுவினர், உபயதாரர்கள் செய்திருந்தனர்