திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அம்பேத்கர் சிலைக்கு இன்று அவரது நினைவு தினத்தை முன்னிட்டு வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார் தலைமையில் மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் வந்தவாசி நகர மன்ற தலைவர் ஜலால், நகர செயலாளர் தயாளன், திமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.