
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி, நடுக்குப்பம் ஊராட்சி, விநாயகபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி மகன் சுரேஷ் (வயது 40). இவர், காமக்கூர் ஏரிக்கரையில் மீன் பிடிக்கச் சென்றார். அப்போது, அவர் ஏரி நீரில் மூழ்கியதாக தெரிகிறது. தகவலறிந்த ஆரணி தீயணைப்பு நிலைய அலுவலர் ஏழுமலை தலைமையில் தீயணைப்பு வீரர்கள் நிகழ்விடம் சென்று சுரேஷை தேடி வருகின்றனர். மேலும், களம்பூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.