திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த காமக்கூர் ஏரிக்கரையில் லேசான விரிசல் ஏற்பட்டு அருகில் உள்ள நிலங்களுக்கு தண்ணீர் சென்றது.தகவலறிந்த ஊராட்சி மன்றத் தலைவர் குப்புசங்கர் தலைமையில், பொதுப் பணித் துறையினர் மற்றும் பொதுமக்கள் மணல் மூட்டைகள் மற்றும் மணலை கொட்டி பொக்லைன் இயந்திரம் மூலம் கரையை சீரமைத்தனர்.
இதனை பொதுப் பணித் துறை உதவி செயற்பொறியாளர்கள் செல்வராஜ், ராஜகணபதி ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். இதில், ஏரிப் பாசன சங்கத்தின் தலைவர் சங்கர், அமமுக ஒன்றியச் செயலர் புருஷோத்தமன் மற்றும் தன்னார்வலர்கள் உடனிருந்தனர்.