திருவண்ணாமலை மாவட்டத்தில் முதல்வர் மருந்தகங்கள் அமைக்க விரும்பும் பி.பார்ம்., மற்றும் டி.பார்ம்., சான்றிதழ் பெற்றவர்களோ அல்லது பி.பார்ம் மற்றும் டி.பார்ம்., படித்தவரின் ஒப்புதலுடன் மற்றவர்களோ நவ. 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.இந்த காலக்கெடு டிச. 5-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
தற்போது, விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு மீண்டும் டிச. 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தில் முதல்வர் மருந்தகங்கள் அமைக்க விரும்புவோர் தங்களது விண்ணப்பங்களை இணையதளத்தில் டிச. 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் எஸ். பார்த்திபன் தெரிவித்தார்