
திருக்கார்த்திகைத் தீபத்திருவிழா 2024 முன்னேற்பாடுகள் ஆய்வு பணிகளுக்காக திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வருகைபுரிந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி. கே. சேகர்பாபு அவர்களை தமிழ்நாடு பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ. வேலு வரவேற்றார். இந்த நிகழ்வின் போது போளூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் டாக்டர் எ வ. வே.கம்பன், திருவண்ணாமலை நகர திமுக செயலாளர் கார்த்திக் வேல்மாறன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் இருந்தனர்.
